கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து தாய் அணியான சிஎஸ்கேவுக்கு கடந்த ஆண்டு திரும்பினார் அஸ்வின். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மொத்தம் நடந்த 14 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு அந்த அணியிலிருந்து விலகி வேறு அணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக தன்னை ட்ரேட் செய்துவிடுமாறு அவர் அணி நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அதை இப்போது மறுத்துள்ளார் அஸ்வின். இது சம்மந்தமாக “நான் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் அடுத்த ஆண்டு நான் அணியில் தொடர்வேனா என்ற விளக்கத்தை மட்டுமே கேட்டுள்ளேன். ஏனென்றால் நான் கடந்த சீசனில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடினேன். அதற்கு முன்பு நான் எல்லா போட்டிகளையும் விளையாடியுள்ளேன். நான் சிஎஸ்கே அணியில் இல்லையென்றால் அவர்களால் சஞ்சுவை வாங்க முடியும். என்னை ரிலீஸ் செய்து அவர்கள் சஞ்சுவை வாங்கிக் கொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார்.