Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் காசு கொடுத்து வேண்டுமானாலும் ருத்துராஜ் பேட்டிங் செய்வதைப் பார்ப்பேன்… மூத்த வீரர் ஓபன் டாக்!

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:26 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், விரைவில் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது அயர்லாந்து தொடரில் அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ருத்துராஜின் பேட்டிங் திறமை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் மூத்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் “அவர் ஒரு பயங்கரமான வீரர். அவர் பயிற்சி செய்வதை நான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கூட இருந்து பார்த்தேன்.  அவரின் திறமையை எப்படி வார்த்தைகளால் விவரிப்பது என்று தெரியவில்லை.

அவரின் பேட்டிங் அசைவுகள் முக்காலா பாட்டுக்கு பிரபுதேவா நடனமாடுவது போல நேர்த்தியாக உள்ளது.  அவர் வலைப்பயிற்சி செய்வதை காசு கொடுத்துதான் பார்க்கவேண்டுமென்று சொன்னால் நான் பணம் கொடுத்து அதைப் பார்ப்பேன்” என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments