Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை எந்த இந்தியரும் படைக்காத இமாலய சாதனையைப் படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப்!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (08:51 IST)
இந்திய அணிக்கு ஐபிஎல் மூலமாகக் கிடைத்த இன்னொரு உறுதியான வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். டி 20 போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர பவுலராக உருவாகி வேகமாக வளர்ந்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு டி 20 போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரும் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் சர்வதேச டி 20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் சஹாலை முந்தி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அர்ஷ்தீப் தற்போது 98 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இன்று நடக்கும் மூன்றாவது டி 20 போட்டியில் அவர் 2 விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி 20 போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் எனும் சாதனையைப் படைப்பார். 2007 ஆம் ஆண்டும் முதல் டி 20 போட்டிகள் நடந்து வந்தாலும் இதுவரை எந்தவொரு இந்திய பவுலரும் இந்த மைல்கல்லை எட்டியதில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

தி ரியல் GOAT… 11 சீசன்களில் 400 ரன்கள்… யாரும் தொட முடியாத கிங் கோலியின் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments