பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

vinoth
வியாழன், 17 ஜூலை 2025 (13:24 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பைக் கூட அவரால் ஏற்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய அவர் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். அதையடுத்து மூன்றாவது போட்டியில் விளையாடினார். அதனால் நான்காவது போட்டியில் அவர் இருக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும் எனக் கூறியுள்ளார். அதில் “நான் தேர்வுக்குழுவில் ஒரு நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் பும்ராவை விளையாட வைப்பேன். ஏனென்றால் அடுத்த போட்டி மிகவும் முக்கியமானது. அதில் நாம் தோற்றால் தொடரை இழக்க வேண்டியிருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments