Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி என்றால் இந்திய கிரிக்கெட் வாரியமா?... அதிருப்தியை வெளியிட்ட வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!

vinoth
புதன், 12 மார்ச் 2025 (13:05 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்திய அணி சாம்பியன் கோப்பையை வென்றாலும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று “இந்திய அணி இந்த தொடர் முழுவதும் ஒரே மைதானத்தில் விளையாடியது” என்பதுதான். குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் இந்த விமர்சனத்தை இந்திய அணியின் மேல் வைத்துள்ளனர்.

இது குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் “இந்தியாவில் இருந்து ஐசிசிக்கு நிறைய வருமானம் வருகிறது என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அதற்காக ஐசிசி என்றால் இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது போல நடந்து கொள்கிறது. ஒரு வேளை இந்தியா வைட் மற்றும் நோ பால் போன்றவை கிரிக்கெட்டில் இருக்கக் கூடாது என்று சொன்னால் அப்போது ஐசிசி ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டாரா நடுவர்?... கிளம்பிய சர்ச்சை!

மின்னல் வேகக் கேட்ச்… பந்தைத் தேடிய கேமராமேன்… நேற்றையப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

காதலில் விழுந்த ஷிகார் தவான்… இன்ஸ்டாகிராமில் அறிவித்து மகிழ்ச்சி!

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments