Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

vinoth
புதன், 11 ஜூன் 2025 (09:58 IST)
இந்திய அணி இம்மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் தொடருக்கு பட்டோடிக் கோப்பை என்று பெயர் வைக்கப்படும்.

ஆனால் தற்போது அந்த தொடருக்கு ‘டெண்டுல்கர்- ஆண்டர்சன்’ கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள ஆண்டர்சன் சச்சின் பெயருடன் தன் பெயரும் சேர்ந்திருப்பது கௌரவமானது எனக் கூறியுள்ளார்.

அதில் “நான் வளரும் காலங்களில் சச்சினின் பேட்ஸ்மேனாக பார்த்துதான் வளர்ந்தேன். கிரிக்கெட்டின் லெஜண்ட்டாகதான் நான் அவரைப் பார்த்து வருகிறேன். அவருடன் நான் நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறேன்.  எனவே அவர் பெயருடன் என் பெயரும் சேர்ந்து கோப்பைக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பது எனக்குக் கௌரவம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments