Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

Advertiesment
ஆர்சிபி

vinoth

, புதன், 20 ஆகஸ்ட் 2025 (08:57 IST)
18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு ஆர்.சி.பி. இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது பெங்களூரு அணி.  ஆனால் அந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. சின்னசாமி மைதானத்தில் அந்த அணியின் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.

இந்த உயிரிழப்புகளால் ஆர் சி பி அணியும் கர்நாடக அரசும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டன. ஆர் சி பி அணி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரு நகரத்தின் மையத்தில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் இனிமேல் போட்டிகளே நடத்தக் கூடாது என்றும் புது மைதானத்தை உருவாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஆர் சி பி அணி பற்றி முன்னாள் இந்திய வீரர் அம்பாத்தி ராயுடு கேலி செய்துள்ளது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “RCB அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர்கள் ஐந்து கோப்பை வெல்ல வேண்டுமென்றால் 72 ஆகும்” எனக் கூறியுள்ளார். ராயுடு தொடர்ச்சியாக ஆர் சி பி அணிக் குறித்து விமர்சித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!