Publish Date: Fri, 06 May 2016 (14:41 IST)
Updated Date: Fri, 06 May 2016 (14:44 IST)
கிரிக்கெட் உலகில் அதிகபட்ச சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய ஜாம்பாவான் சாசின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் முறியடிக்க காத்திருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் அரங்கில் தனது 10000 ரன் மைல் கல்லை தனது 32 வயதில் கடந்து சாதனை புரிந்தார். இந்த சாதனையை 31 வயதில் கடந்து சாதனை புரிய அலாஸ்டர் குக்-க்கு இன்னும் 36 ரன்களே தேவைப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் குக் இந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குக் 10000 ரன்கள் மைல்கல்லை தாண்டினால் குறைந்த வயதில் இந்த மைல்கல்லை எட்டிய சச்சினின் சாதனையை அவர் முறிடிப்பார்.
மேலும் டெஸ்டில் 10000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 12 வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.