Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

vinoth
திங்கள், 16 ஜூன் 2025 (07:39 IST)
27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. வழக்கமாக ‘chokers’ என கேலி செய்யப்படும் தென்னாப்பிரிக்க அணி இம்முறை பலமிக்க ஆஸி அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றியை இந்தியாவில் உள்ள ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா.

இந்த போட்டியை தென்னாப்பிரிக்க அணி வெல்வதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது நான்காவது இன்னிங்ஸில் எய்டன் மார்க்கம்மின் ஆட்டம் அமைந்தது. இக்கட்டான நிலையில் அவர் சதமடித்து தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதைத் தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அவர் ரசிகர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று அங்கிருந்த ஒருவரிடம் இருந்து பியரை வாங்கிக் குடித்தார். இது குறித்து பின்னர் பேசிய மார்க்ரம் “அவர் என்னுடைய பள்ளி நண்பர். என்னை அங்கு அழைத்தார். நான் இப்போது பிஸியாக இருக்கிறேன் என சொன்னேன். அவர் என்னிடம் பியர் இருக்கிறது வா என்றார். நான் உடனே சரியென்று சென்று பியர் அருந்தினேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments