Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவை அடுத்து ஜெய்ஸ்வால் & கில் எடுத்த அதிரடி முடிவு!

vinoth
புதன், 15 ஜனவரி 2025 (07:58 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக அனைத்து வீரர்களும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. இதையடுத்து கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய ஃபார்மை மீட்டெடுக்க மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை ரஞ்சி அணியோடு அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரும் ரஞ்சிக் கோப்பை தொடரில் தாங்கள் ஆர்வமாக இருப்பதாக அவர்கள் சார்ந்த அணிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments