இளம் இந்திய கிரிக்கெட் வீரரான நிதிஷ்குமார் ரெட்டி திருப்பதி கோவிலில் முட்டி போட்டு ஏறிச் சென்று தரிசனம் செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த நிதிஷ்குமார் ரெட்டி தனது ஆபாரமான ஆட்டத்தால் இந்திய அணியின் டி20 போட்டிகளில் பங்கேற்றார். அதிலும் அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் சிறப்பாக விளையாடிய நிதிஷ்குமார் ரெட்டி மெல்போர்ன் டெஸ்ட்டில் 114 ரன்கள் அடித்து விளாசியதுடன், டெஸ்ட் தொடரில் மொத்தம் 298 ரன்கள் ஸ்கோர் செய்தார். அதேபோல பந்துவீச்சிலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போது இவருக்கு ரசிகர்களும் அதிகமாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது நிதிஷ்குமார் ரெட்டி திருப்பதி மலைக்கு தரிசனத்திற்கு சென்றுள்ளார். திருப்பதி மலைப்படிகளில் முட்டி போட்டு ஏறி அவர் நேர்த்திக்கடன் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K