Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் விளையாட தடை.. பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:57 IST)
உலகில் நடக்கும் கிரிக்கெட் லீக்குகளில் அதிக வருவாய் ஈட்டும் ஒரு லீக் தொடராக பிசிசிஐ யால் நடத்தப்படும் ஐபிஎல் அமைந்துள்ளது. வீரர்கள் தங்கள் தேச அணிக்காக விளையாடும் போது கிடைக்காத தொகையைக் கூட இரண்டு மாத ஐபிஎல் தொடரில் சம்பாதித்து விடுகிறார்கள்.

இதனால் பல நாட்டு வீரர்களும் ஐபிஎல் போன்ற லீக் தொடர்களில் விளையாடவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பவுலர்கள் அதிகளவில் லீக் போட்டிகளில் விளையாடுகிறார். இந்நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் விளையாட மூன்று வீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

முஜீப் உர் ரஹ்மான்,  ஃபசல் ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகிய மூவரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்து வாருங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன்

அபிஷேக் ஷர்மா விக்கெட்டை மட்டும் சீக்கிரம் வீழ்த்துங்கள்… பாக் வீரர்களுக்கு அக்தர் அறிவுரை!

தோனியின் சாதனை முந்திய சஞ்சு சாம்சன்!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: ஹர்திக் பாண்டியா நீக்கமா? அவருக்கு பதில் உள்ளே வருவது யார்?

சூர்யகுமார் யாதவ்வுக்கு 30 சதவீத போட்டிக் கட்டணம் அபராதம்.. ஐசிசி உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments