உலகில் நடக்கும் கிரிக்கெட் லீக்குகளில் அதிக வருவாய் ஈட்டும் ஒரு லீக் தொடராக பிசிசிஐ யால் நடத்தப்படும் ஐபிஎல் அமைந்துள்ளது. வீரர்கள் தங்கள் தேச அணிக்காக விளையாடும் போது கிடைக்காத தொகையைக் கூட இரண்டு மாத ஐபிஎல் தொடரில் சம்பாதித்து விடுகிறார்கள்.
இதனால் பல நாட்டு வீரர்களும் ஐபிஎல் போன்ற லீக் தொடர்களில் விளையாடவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பவுலர்கள் அதிகளவில் லீக் போட்டிகளில் விளையாடுகிறார். இந்நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் விளையாட மூன்று வீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகிய மூவரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.