Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியை வீழ்த்த ஒரே வழி இதுதான்… ஆடம் கில்கிறிஸ்ட் சொல்லும் யோசனை!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:24 IST)
இந்த உலகக் கோப்பை தொடரில் அசுர பலத்தோடு வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்திய அணி. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பலம் மிக்க அணிகளாக சொல்லப்பட்ட பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை எளிதாக வென்று லீக் போட்டிகளில் தோல்வியே காணாத ஒரே அணியாக உள்ளது.

அரையிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இந்திய அணியை ஒரே ஒரு வழிதான் உள்ளது எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “இந்திய அணியை வெல்ல வேண்டுமென்றால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவிடவேண்டும். அதன்மூலம் இந்திய பவுலர்களை இரவு நேரத்தில் எதிர்கொள்வதை தவிர்க்கலாம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்துவிட்டு , பின்னர் பவுலிங்கில் இந்திய அணிக்கு அழுத்தம் தரவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments