Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பெருமைமிகு முஸ்லீம்.. பெருமை மிகு இந்தியன் – பிராத்தனை குறித்த சர்ச்சைக்கு முகமது ஷமி பதில்!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (09:13 IST)
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டியில் மட்டும் தோற்று இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய இந்திய அணியின் முகமது ஷமி 24 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் போது இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது ஐந்து விக்கெட் வீழ்த்திய ஷமி அதைக் கொண்டாடும் விதமாக மைதானத்திலேயே பிராத்தனை செய்ய சென்றதாகவும், ஆனால் பின்னர் அவர் பிராத்தனை செய்யாமல் எழுந்து வந்துவிட்டதாகவும் ஒரு சர்ச்சை கிளம்பியது.

இதுகுறித்து இப்போது ஷமி விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? நான் யாரையும் பிரார்த்தனை செய்வதைத் தடுக்க மாட்டேன். நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், நான் பிரார்த்தனை செய்வேன். இதில் என்ன பிரச்சனை? நான் ஒரு முஸ்லிம் என்பதை பெருமையுடன் கூறுவேன். நான் ஒரு இந்தியன் என்பதை பெருமையுடன் சொல்வேன். அதில் என்ன பிரச்சனை? நான் பிராத்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமென்றால் நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்” எனக் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments