Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தமாக கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்த டி வில்லியர்ஸ் – உருக்கமான ட்வீட்

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:02 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக உலக டெஸ்ட் தொடர்கள், டி20, உலகக்கோப்பை என பல தொடர்களில் விளையாடியவர். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடினார்.

இந்நிலையில் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் மொத்தமாக ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டி வில்லியட்ஸ் “இது ஒரு அற்புதமான பயணம். ஆனால் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். இதுவரையிலான அனைத்து போட்டிகளிலும் சக வீரர்களுடன் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் விளையாடி வந்துள்ளேன். இப்போது எனது 37 வயதில் அந்த நெருப்பு அவ்வளவு பிரகாசமாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்தை அழைச்சிட்டு வரக் கூடாது.. ஸ்லீவ்லெஸ் போடக் கூடாது! - ஐபிஎல் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள்?

இதனால்தான் விராட் கோலி அபூர்வம்.. பாராட்டித் தள்ளிய ரிக்கி பாண்டிங்!

ஒரே பிட்ச்சில் விளையாடுவது சாதகமான அம்சம்தான்… கம்பீர் கருத்துக்கு எதிராக பேசிய ஷமி!

ஒரே க்ரவுண்டுல விளையாடினா மட்டும் பத்தாது.. திறமையும் இருக்கணும்! - இந்திய அணி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!

யாரும் செய்யாத சாதனை! வாய்ப்பு தருமா பிசிசிஐ? இறுதிப் போட்டியில் இடம்பெறுவாரா வருண் சக்ரவர்த்தி?

அடுத்த கட்டுரையில்
Show comments