Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஞ்சினியர்கள் எதையும் எளிதாக கற்றுக்கொள்வார்கள்… எலிமினேட்டர் போட்டியில் அசத்திய ஆகாஷ் மத்வால் கருத்து!

இஞ்சினியர்கள் எதையும் எளிதாக கற்றுக்கொள்வார்கள்… எலிமினேட்டர் போட்டியில் அசத்திய ஆகாஷ் மத்வால் கருத்து!
, வெள்ளி, 26 மே 2023 (10:46 IST)
சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபயர் 2 முன்னேறிய நிலையில் ஆகாஷ் மத்வாலின் விக்கெட்டுகள் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் மும்பை அணி பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் காட்டிய மாஸ் பலரையும் வியக்க வைத்தது. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் ஆகாஷ் மத்வாலின் செய்கை லக்னோவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மொத்தம் 3.3 ஓவரே வீசியிருந்த ஆகாஷ் மத்வால் மொத்தம் கொடுத்ததே 5 ரன்கள் மட்டும்தான். 5 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை அசால்ட்டாக தூக்கிய மத்வாலை கண்டு மற்ற அணிகளுமே மிரண்டிருந்தால் ஆச்சர்யமில்லை. இவ்வளவு குறைவான ஓவர்களில் குறைவான ரன்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் ஆகாஷ் மத்வால்.

அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற மத்வால் பொறியாளராக இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்குள் நுழைந்தவர். மேலும் இதுபற்றி பேசிய அவர் “இஞ்சினியராக இருந்து கிரிக்கெட்டுக்குள் வந்தேன். இஞ்சினியர்கள் எதையும் எளிதாக புரிந்துகொள்வார்கள் என்பதால் எனக்கு எளிமையாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்காளி ஃபைனல்ஸ்ல பாப்போம்.. வரட்டாடாடாங்ங்..! – இணையத்தை கலக்கும் IPL Memes!