Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த மத்வால்!

Advertiesment
Akash Madhwal
, வியாழன், 25 மே 2023 (11:40 IST)
நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபயர் 2 முன்னேறிய நிலையில் ஆகாஷ் மத்வாலின் விக்கெட்டுகள் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் மும்பை அணி பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் காட்டிய மாஸ் பலரையும் வியக்க வைத்தது. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் ஆகாஷ் மத்வாலின் செய்கை லக்னோவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மொத்தம் 3.3 ஓவரே வீசியிருந்த ஆகாஷ் மத்வால் மொத்தம் கொடுத்ததே 5 ரன்கள் மட்டும்தான். 5 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை அசால்ட்டாக தூக்கிய மத்வாலை கண்டு மற்ற அணிகளுமே மிரண்டிருந்தால் ஆச்சர்யமில்லை. இவ்வளவு குறைவான ஓவர்களில் குறைவான ரன்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் ஆகாஷ் மத்வால்.

இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் அணிக்காக விளையாடிய அனில் கும்ப்ளே படைத்த சாதனையை சமன் செய்துள்ளார் ஆகாஷ் மத்வால். அனில் கும்ப்ளே 5 விக்கெட்களை வீழ்த்தி 5 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன அடிச்சு பெரிய ஆள் ஆகலாம்னு முடிவு பண்ணிட்ட! – மன்கட் ஓவர் போட்டு க்ரிஸ் ஜோர்டான் சாதனை!