Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

Advertiesment
194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

vinoth

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (09:32 IST)
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம், அதன் கடவுள் சச்சின் என்பது அவர் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வாக்கியம். அந்தளவுக்கு அவர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மேல் தன்னுடைய ஆளுமையை செலுத்தியிருந்தார். அவருக்குப் பிறகு வந்த தோனி மற்றும் கோலி ஆகியோருக்கும் இதுபோல ரசிகர்கள் அமைந்தாலும், சச்சின் என்றைக்குமே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஸ்பெஷல்தான்.

சச்சின் பல தனிப்பட்ட சாதனைகளைப் படைத்துள்ளார். அவற்றி பெரும்பாலானவற்றை கிரிக்கெட் விளையாடப்படுவ் வரை கூட யாராலும் முறியடிக்க முடியாது. சச்சின் 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் போது 194 ரன்கள் இருந்த போது அணிக் கேப்டனான டிராவிட் டிக்ளேர் செய்தார். இது அப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டிராவிட்டும், கங்குலியும் சேர்ந்து சச்சின் இரட்டை சதம் அடிப்பதை விரும்பாமல் இந்த முடிவை எடுத்துவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த போது சச்சின் அதற்கு எப்படி எதிர்வினையாற்றினார் என்பதைக் குறித்து அப்போது அணியில் இடம்பெற்றிருந்த ஆகாஷ் சோப்ரா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “சச்சின் எப்போதுமே கோபத்தை வெளிக்காட்ட மாட்டார். ஆனால் அன்று மிகவும் அதிருப்தியோடும், ஏமாற்றத்தோடும் இருந்தார். அந்த அளவுக்கு அவர் சோகமாக இருந்ததை நான் பார்த்ததேயில்லை. அன்றும் அவர் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். இது கேப்டனின் முடிவாக மட்டும் இல்லாமல் சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளரின் முடிவாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!