அனைத்து அணிகளும் அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… டிவில்லியர்ஸ் கருத்து!

vinoth
திங்கள், 8 ஜனவரி 2024 (10:40 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வென்றது. இந்த போட்டி இரண்டாவது நாளிலேயே முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

டி 20 கிரிக்கெட் மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் அணிகளோ, அணி நிர்வாகங்களோ அதிகமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதன் காரணமாக ஒரு ஆண்டுக்கு குறைந்த அளவிலேயே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் அனைத்து அணிகளும் தங்களுக்குள் அதிக டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை விளையாடவேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி “டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் மாற்றம் வரவேண்டும். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டுமென்ற ஆர்வம் அனைத்து அணிகளுக்கும் வரவேண்டும்.  உலகம் முழுவதும் நடத்தப்படும் பல டி 20 லீக் போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த தொடர்களின் மூலம் வீரர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது. அவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments