ஒரே நாளில் விழுந்த 23 விக்கெட்கள்… டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்த சாதனை!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:01 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இரு அணிகளும் விக்கெட்களை மளமளவென இழந்து தடுமாறி வருகின்றன. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 23 விக்கெட்கள் இழந்துள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கெட்கள் விழுந்ததில் இரண்டாவது இடத்தில் நேற்றைய இன்னிங்ஸ் அமைந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார். அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பின்னர் மீண்டும் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 62 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments