அடக்கம் அள்ளுதுடா யப்பா... புடவையில் டீசண்டா போஸ் கொடுத்த ரேஷ்மா!
Publish Date: Thu, 20 Jan 2022 (15:30 IST)
Updated Date: Thu, 20 Jan 2022 (15:37 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.
இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
இதையடுத்து தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா எப்போதும் எல்லை மீறிய கிளாமர் காட்டி இணையத்தை அதிர வைப்பார். ஆனால், தற்போது சேலையில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் டீசண்டான போஸ் கொடுத்து நெட்டிசன்களின் டீசண்டான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறார்.
அடுத்த கட்டுரையில்