குழந்தையின் தலையில் முடி இருக்கிறதோ இல்லையோ வாரம் இருமுறை தலைக்கு குளிப்பாட்டுங்கள். தினமும் தலைக்கு குளிப்பாட்ட வேண்டாம். வெயிலில் சென்றால் தலையில் மறைக்க பேபி டவல், ஹேட், கேப் பயன்படுத்து நல்லது.
சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவுகள் குழந்தையின் முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ, பி, சத்துக்கள் முடியின் தரத்தை மேம்படுத்தும். பருப்புகள், பப்பாளி, கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் இச்சத்துக்கள் உள்ளன.
தொடர்ந்து எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து வந்தால் ஸ்கால்புக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும். இதனால் முடி வளர்ச்சியும் சீராக இருக்கும். முடிக்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கும்.
2 அல்லது 3 நாளைக்கு ஒருமுறை முடியை அலசுங்கள். வியர்வையால் உண்டாகும் அழுக்கு, கிருமிகள் நீங்கும். மேலும் தயிர், செம்பருத்தி, முட்டை போன்ற இயற்கை கண்டிஷனரை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். முடி ஆரோக்கியமாகும்.
ஈரமான முடியை துவட்டும்போது, மிதமான அழுத்தத்தில் முடியை துவட்டுங்கள். வேகமாக தேய்க்க கூடாது. ஒத்தி எடுப்பது சிறந்த முறையாகும். குழந்தைகளுக்கு முடியை காய வைக்க டவலால் துடைப்பதே சரியான வழி. ப்ளோ ட்ரையர் போன்றவற்றை எக்காரணத்துக்கும் பயன்படுத்த கூடாது.
தலைக்கு மிருதுவான பிரஷ் அல்லது சீப்பை பயன்படுத்துவது நல்லது. சீரான இடைவெளியில் ஹேர் கட் செய்வதால், குழந்தைகள் அழகாக இருப்பார்கள். முடி பிளவுகளும் ஏற்படாது. கண்கள் அருகில் வரை, முடி வளர்ந்து தொல்லை செய்யாது.