இந்தியாவை பொறுத்த வரை புரபஷனல் படிப்புகள் அனைத்திற்கும் கல்வி கடன் பெறலாம். அந்த வகையில் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கல்வி கடன் பெறுவது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக வங்கிகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி கடன் பெறுவதற்கு தகுதியானவர்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான வங்கிகள், 16 முதல் 26 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்வி கடன்களை வழங்குகின்றன.
கல்விக் கடன் தொகை அளவு:
இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதே போல வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
செலுத்த வேண்டிய முன்தொகை:
4 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வாங்கும் போது முன்தொகை எதுவும் கட்ட தேவையில்லை. இதே 4 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக கடன் கோரினால் இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் 5 % முன்தொகையும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15% முன்தொகையும் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதம்:
4 லட்சம் ரூபாய் வரை - BR+2.00% i.e. 12.60% p.a.
4 லட்சம் ரூபாய்க்கு மேல் - BR+2.75% i.e. 13.35% p.a.
கடனுக்கு உத்தரவாதம்:
4 லட்சம் ரூபாய் வரை பெறப்படும் கடனுக்கு சொத்து பிணை தேவையில்லை. ஆனால், 4 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை. அதோடு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல் தேவை.
கடனை திருப்பி செலுத்தும் முறை:
படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து கடனை திருப்பி செலுத்த வேண்டும். மொத்தமாக ஐந்து - ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.