Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிய மனுஷன் நீங்களே இப்புடி பண்ணலாமா..? ஏ ஆர் ரஹ்மானை சாடும் சுஷாந்த் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (09:18 IST)
பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில் அவரது அஸ்தி கடந்த வாரம் கங்கை நதியில் கரைக்கப்பட்டது.

சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து வெளியாக தயாராக உள்ள படம் “தில் பேச்சாரா”. இந்த படம் மே மாதமே ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாவதாக செய்திகள் வெளியான நிலையில் சுஷாந்த் சிங் ரசிகர்கள் மற்றும் பலர் இந்த படம் தியேட்டரில் வெளியாவதுதான் சுஷாந்த் சிங்கிற்கு நாம் செய்யும் மரியாதை என கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும் என்பதே தெரியாத சூழல் உள்ளதால் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. ஜூலை 24ம் தேதி ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதனை கண்ட சுஷாந்த் ரசிகர்கள், உன்னதமான மனிதனின் மறைவிற்கு பிறகும் இப்படி பண்ணலாமா?... நீங்கள் அதற்கு ஆதரவு வேறு கொடுக்கிறீர்களே.. ஆரம்பத்தில்  சுஷாந்த் சிங்கின் கடைசி படத்தை திரையில் வெளியிடுவதாக சொல்லி ஆதரித்து ட்வீட் போட்ட நீங்களே இப்பொழுது இப்படி ஏமாற்றிவிட்டீர்கள் என சுஷாந்தின் ரசிகரக்ள் கொந்தளித்து வருகின்றனர் .  “தில் பேச்சாரா” படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments