பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது புத்தம் புது ஆணுறை விளம்பாரத்துக்காக காலண்டர் ஒன்றை தயாரித்து அதை வெளியிட்டுள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும், அவரது முந்தையை கால வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் அவ்வப்போது வந்தவாறே இருந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அதுல் அஞ்சான், சன்னி லியோனை ஒரு பொதுக்கூட்டத்தில் திட்டி தீர்த்தார். நாட்டில் கற்பழிப்பு வழக்குகள் அதிகமாவதற்கு காரணம் சன்னி லியோன் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
சன்னி லியோன் நடித்த ஆணுறை விளம்பரம் ஒன்று மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்பட்டதே அவரது இந்த பேச்சுக்கு காரணம். இந்த நிகழ்வு நடந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்கு சன்னி அடுத்த ஆணுறை விளம்பரம் ஒன்றை எடுத்து காலண்டராக வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பான உடலுறவும், ஆணுறையும் இளம் தலைமுறையினருக்கு தேவையான ஒன்று. பாதுகாப்பான உடலுறவு மீது என்னக்கு நம்பிக்கை உள்ளதால், ஆணுறை விளம்பரங்களில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். ஆணுறை ஒரு பாதுகாப்பு கவசம் என சன்னி லியோன் கூறியுள்ளார்.