மலேசியாவில் நிறைவுபெற்ற மொட்ட சிவா கெட்ட சிவா
மலேசியாவில் நிறைவுபெற்ற மொட்ட சிவா கெட்ட சிவா
லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடித்து வந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நிறைவடைந்துள்ளது.
தெலுங்கில் வெற்றி பெற்ற பட்டாசு படத்தை ஆர்.பி.சௌத்ரி தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற பெயரில் தயாரித்து வந்தார். நாயகன் லாரன்ஸ், நாயகி நிக்கி கல்ராணி. சாய்ரமணி இயக்கி வந்த இந்தப் படத்தின் பாடல் காட்சியை மலேசியாவில் படமாக்கினர். இந்த பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளது.
ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் படம் திரைக்கு வருகிறது.