Publish Date: Thu, 28 Mar 2019 (19:13 IST)
Updated Date: Thu, 28 Mar 2019 (19:22 IST)
பாலிவுட் நடிகை சோனக்ஷி சின்ஹா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்டு பல ரசிகர்கள் அவரை கேவலமாக திட்டி வருகின்றனர்.
சோனக்ஷி வெளியிட்ட புகைப்படத்தில் அவர் மிகவும் ஆபாசமாக உடை அணிந்துள்ளார். இதுவே ரசிகர்களின் கோபத்திற்கு காரணம். பலர் அவர், அடி வெட்கம் கெட்டவளே, இந்த உடை அணிவதற்கு சும்மா இருக்கலாம், இந்திய கலாச்சாரத்தை கெடுக்கிறார் என்ரெல்லாம் திட்டினர்.
இதற்கு சோனக்ஷி பின்வருமாரு பதில் அளித்துள்ளார். என் உடையை பார்த்து கிண்டல் செய்கிறார்களே, நான் என்ன என் உடல் தெரியும்படியாகவா இருக்கிறேன். உடல் பாகங்கள் தெரியும்படி நான் உடை அணிய மாட்டேன்.
என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்களே அதே ஆட்கள்தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போடுகிறீர்கள்.
பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நான் உள்ளே உடை அணியாதது போல் இருக்கலாம். ஆனால் நான் ஒழுங்காகத்தான் உடை அணிந்திருக்கிறேன். எனவே, தேவையில்லாமல் பேசாதீர்கள் நன்றாக பார்த்துவிட்டு பேசுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.