Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டுக்காளி திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்னுடைய உரிமை… சிவகார்த்திகேயன் பதில்!

vinoth
வெள்ளி, 10 ஜனவரி 2025 (07:24 IST)
கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸானது. இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடிக்க சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்திருந்தார். படம் பின்னணி இசையில்லாமல் ரிலீஸானது

ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் வெகுஜனப் பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருக்கு புரியாமல் போனதாக அதிருப்தியை தெரிவித்திருந்தனர். அது பற்றி பேசிய இயக்குனர் அமீர் “கொட்டுக்காளி திரைப்படம் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கப்பட்ட படம். அதை மையநீரோட்ட சினிமாவோடு ரிலீஸ் செய்திருக்கவேக் கூடாது. அப்படி தியேட்டரில் அந்த படத்தை ரிலீஸ் செய்தது வெகுஜன ரசிகர் மேல் செய்யும் வன்முறை. அந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்திருந்தாலே போட்ட பணத்தை எடுத்திருக்கலாம். “ எனப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் இப்போது அதற்கு சிவகார்த்திகேயன் ஒரு நேர்காணலில் பதிலளித்துள்ளார். அதில் “கொட்டுக்காளி படத்தை சர்வதேச ரசிகர்கள் ரசிக்கும் போது நம் ரசிகர்கள் மட்டும் ஏன் ரசிக்க மாட்டாங்க. நான் ரசிகர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை.  அந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவேண்டும் என நினைத்தேன்.  நிறைய பேரு ஓடிடி-ல ரிலீஸ் பண்ணிருக்கலாம்னு சொன்னாங்க.  அது என்னுடைய ரைட்ஸ். படம் நல்லா இருக்கா இல்லையா என்பதை சொல்வது மட்டும்தான் உங்க உரிமை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொட்டுக்காளி திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்னுடைய உரிமை… சிவகார்த்திகேயன் பதில்!

பழம்பெரும் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

இளையராஜாவின் ஹிய் பாடலை ‘ரிக்ரியேட்’ செய்யும் யுவன் ஷங்கர் ராஜா!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments