கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் பாலாவுக்கு அவரது திரையுலக வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய வர்மா திரைப்படம் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்பட்டு வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கி வெளியிட்டார்கள். அதன் பின்னர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொள்ள அதுவும் அடுத்த அடியாக அமைந்தது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	அதன்  பின்னர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் பொங்கலை முன்னிட்டு நாளை இந்த படம் ரிலீஸாகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் படம் சம்மந்தமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் அருண் விஜய் “வணங்கான் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.. பாலா சார் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்த தலைமுறை ரசிகர்களுக்கு பாலா சார் யார் என்பது வணங்கான் மூலம் தெரியவரும். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.