பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரின் வீட்டில் இருந்து தனது மகளும், நடிகையுமான ஷ்ரத்தா கபூரை இழுத்து வந்ததாக வெளியான தகவல் குறித்து நடிகர் சக்தி கபூர் பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தன்னுடைய மனைவி அதுனாவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். ஃபர்ஹானுக்கும், நடிகை ஷ்ரத்தா கபூருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பே விவகாரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஷ்ரத்தா கபூர், ஃபர்ஹானின் வீட்டில் லிவ் இன் முறைப்படி வாழச் சென்றார் என்று கூறப்பட்டது.
ஷ்ரத்தாவின் லிவ் இன் முறை முடிவு அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூருக்கு பிடிக்கவில்லை. இதனால், ஃபர்ஹான் வீட்டிற்கு சென்று மகளை இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகின.
சக்தி கபூர், ஃபர்ஹான் வீட்டில் இருந்து ஷ்ரத்தாவை நான் இழுத்து வரவில்லை என சக்தி கபூர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நான் ஃபர்ஹானை மதிக்கிறேன். அவர் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.