வெகுநாள்களாக பேசப்பட்டுவரும் சண்டக்கோழி இரண்டாம் பாகம் பிப்ரவரி இறுதியில் தொடங்குகிறது. லிங்குசாமி இயக்கும் இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த விஷால், ராஜ்கிரணுடன் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.
விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் இறுதிகட்ட பணிகளில் உள்ளார். அத்துடன் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இரும்பு திரை படத்தின் ஒரு ஷெட்யூல்டும் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து பிப்ரவரி இறுதியில் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன் துப்பறிவாளன் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துவிடும் என படக்குழு கூறியுள்ளது.