Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RRR படத்தில் ஆல்யா பட்டை நீக்கிய ராஜமௌலி - எல்லாம் சடக்-2 செய்த சம்பவம் தான்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:26 IST)
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி RRR படத்தில் இருந்து ஆல்யா பட்டை நீக்கிவிட்டு நடிகை பிரியங்கா சோப்ராவை புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம். காரணம், மறைந்த சுஷாந்தின் இறப்பில் மக்களால் வெறுக்கப்பட்ட வாரிசு குழந்தைகளில் முக்கியமானவர் நடிகை ஆல்யா பட். இதனால் அவர் நடிப்பில் வெளியான சடக் 2 ட்ரைலர்  தற்போதுவரை 12 மில்லியன் டிஸ்லைக் பெறுள்ளது. எனவே இது இப்படியே போனால் நம்ம படத்துக்கும் இதே கதி தான் என்பதை சுதாரித்துக்கொண்ட ராஜமௌலி  பிரியங்கா சோப்ராவிற்கு சான்ஸ் கொடுத்துட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹன்சிகாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் புகைப்பட ஆல்பம்!

விண்டேஜ் லுக்கில் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!... கார்ஜியஸ் ஆல்பம்!

சஞ்சய் & சந்தீப் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?.. வெளியான தகவல்!

பொறுத்தது போதும் என இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!

இன்று வெளியாகிறது மம்மூட்டி & கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments