Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மானம் போகுது டெலீட் பண்ணிடுங்க - உலகையே திரும்பி பார்க்க வைத்த "சடக் 2" ட்ரைலர்!

Advertiesment
மானம் போகுது டெலீட் பண்ணிடுங்க - உலகையே திரும்பி பார்க்க வைத்த
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (08:10 IST)
சீரியலில் இருந்து படங்களில் நடிக்க துவங்கிய இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் வாரிசு நடிகர்களின் அரசியல் முக்கிய காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

அதில், கரண் ஜோகர், ஆலியா பட், மகேஷ் பட், சோனம் கபூர், கரீனா கபூர் உள்ளிட்ட வாரிசு நடிகர்கள் நேரடியாக சுஷாந்த்தை புறக்கணித்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது தங்களது வெறுப்பை காட்ட ஆரம்பித்த சுஷாந்தின் ரசிகர்கள் அவரக்ளை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்வதை நிறுத்தினர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மகேஷ் பட் இயக்கத்தில் சஞ்சய் சத், சித்தார்த் ராய் கபூர், ஆதித்ய ராய் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'சடக் 2' படத்தின் ட்ரைலர் வெளியாகியது. வெளியான 12 மணி நேரத்தில் 1.5 மில்லியன் டிஸ்லைக்குகள் பதிவாகியத்தை அடுத்து தற்ப்போது 11 மில்லியன் டிஸ்லைட்ஸ்களை கடந்து உலகத்திலேயே யூடியூபில் பார்வையாளர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட வீடியோக்கள் லிஸ்டில் 3 வது இடத்தில சதக் 2 ட்ரைலர் உள்ளது. அது முதல் இடத்திற்கு வருவதற்குள் டெலீட் செய்து பண்ணிடுங்க ப்ளீஸ் இந்திய சினிமாவின் மானம் கப்பல் ஏறி போகுது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளின் கியூட் வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஆல்யா மானசா!