Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தில், கண்கவர் 3D ப்ரொஜெக்‌ஷனில், காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான 'கியாரா கியாரா' ஸ்னீக் பீக்கை வெளியிட்டது!!

Advertiesment
டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தில், கண்கவர் 3D ப்ரொஜெக்‌ஷனில்,  காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான 'கியாரா கியாரா' ஸ்னீக் பீக்கை  வெளியிட்டது!!

J.Durai

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (09:01 IST)
மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 
 
ZEE5  சமீபத்தில் வெளியிடப்பட்ட, மர்மத் திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3D ப்ரொஜெக்ஷனை நடத்தியது. 
 
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம்,  மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள 'கியாரா கியாரா' சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
விக்டோரியன் கோதிக் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்ற டேவிட் சாசூன் நூலகம், மும்பையின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நிகழ்ச்சியின் தொடக்க நாளான ஆகஸ்ட் 9 அன்று நடந்த ஷோகேஸ், இந்த சீரிஸின் அறிமுகத்தை வெளிப்படுத்தி, பிரமிக்க வைக்கும் முன்னோட்டத்தை வழங்கியது.  மும்பையின் மிகவும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றின் பின்னணியில், காலத்தை வளைக்கும் இந்த கதையை உயிர்ப்பித்தது. 
 
ZEE5 இன் இந்த புதுமையான விளம்பர முயற்சி, பலதரப்பட்ட பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலான அதன் பிராண்டின் தனித்துவத்திற்கு ஒரு சான்றாகும். 3D புரஜக்சனுக்கு முன்னதாக, ZEE5 அதிரடி டிரெய்லர் வெளியீட்டையும், தொழில்துறையின் பிரபலங்கள் மற்றும் சினிமாக்காரர்களுக்கான சிறப்புத் திரையிடலையும் நடத்தியது. 
 
சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களின் புதுமையான முயற்சியாக உருவாகியிருக்கும்,  கியாரா கியாரா பாஸிடிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 
 
பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு 11:11 மணிக்கு, இந்த திரில்லர் சீரிஸின் அனைத்து 8 எபிஸோடுகளும்,  ZEE5 ல் வெளியிடப்பட்டது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!