Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

யோகி பாபு நடிப்பில்,“சட்னி சாம்பார்” சீரிஸை,டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் ஆகியது!

Advertiesment
yogi babu

J.Durai

, வெள்ளி, 26 ஜூலை 2024 (11:18 IST)
நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார்,ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
 
இதயம் கவரும் இந்த பெப்பி ராப் பாடல், உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கிடையேயான போரையும், உணவுகளுக்கு இடையிலான நிலைப்பாட்டையும் காட்டுகிறது. 
 
இந்த ராப் பாடல் வரிகளை ராகுல் ஸ்ரீதர் (ஹிப்பி எழுத்தாளர்) எழுதியுள்ளார்.
 
'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிமுகப்படுத்தும் விதத்தில்  படக்குழுவினர் காமிக் வடிவில் இதன் களத்தை விவரிக்கும் ஒரு சிறுகதையையும்  வெளியிட்டுள்ளனர். இந்த காமிக் வடிவ கதையில் இயக்குநர் ராதாமோகனுக்கும் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கும் இடையிலான கற்பனை உரையாடல் இடம்பெற்றுள்ளது. ராப் மியூசிக்கும் மற்றும் காமிக் வடிவ தொடரும்  இந்த சீரிஸ் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது. 
 
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. யோகிபாபு வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகிபாபு கதை நாயகனாக ஒரு சீரிஸில் நடிப்பது இதுவே முதன் முறையாகும்.
 
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர,இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
 
'சட்னி - சாம்பார்' முழுக்க முழுக்க  குடும்பங்கள் சிரித்து ரசிக்கும்,யூத்ஃபுல் எண்டர்டெய்னர் சீரிஸாக இருக்கும்.
 
இந்தத் சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 
 
'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குனர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்
 
இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். 
 
கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!