ஸ்ரீதேவி பங்களா; அந்த கேள்வி... பாதியில் வெளியேறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி!

செவ்வாய், 22 ஜனவரி 2019 (20:21 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கடந்த ஆண்டு தடக் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தற்போது அடுத்து ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். 
 
இந்நிலையில் ஜான்வி மும்பையில் அவர் நடிக்கும் புதிய படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
அப்போது, பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா பற்றிய சர்ச்சை குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டது. இந்த கேள்வியை எதிர்பாராத ஜான்வி அதிர்ச்சியில் அமைதியானார். 
 
உடனே ஜான்வியின் அருகில் இருந்த அவர் மேனேஜர் ’தாயை இழந்த மகளிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கூட தெரியாத? என்று கோபமாக கூறிவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு ஜான்வியை அழைத்து கொண்டு வெளியேறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு