மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை பற்றியுன், அதிலிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களை குறித்தும் , ஊரடங்கு உத்தரவால் தன வீட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை குறித்தும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
"நான் உண்ணும் உணவை மதிக்க கற்றுக்கொண்டேன். எங்கள் வீட்டின் மளிகை சாமான் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இருக்குமா என்று தெரியவில்லை... யாரோ ஒருவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அவர் உயிரை பணய வைத்து வெளியில் செல்வதை இதற்கு முன் நான் யோசித்து கூட பார்த்ததில்லை. வாழ்க்கையில் நான் சுயநலவாதியாகவும் பொறுப்பற்றவளாகவும் இருந்ததை இந்த நேரம் எனக்கு உணர்த்துகிறது.
என் தந்தை இதற்குமுன் என்னை எந்த அளவிற்கு miss பண்ணியிருக்கிறார் என்பதை உணர்கிறேன். கொரோனா ஊரடங்கிற்கு முன் நானும் என் தங்கையும் வெளியில் சென்று வீடு திரும்பினால் அவ்வளவு மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து வரவேற்பார். ஆனால், அவர் காத்திருப்பதை நான் ஒருபோதும் யோசிக்கமாட்டேன். இப்போது நாங்கள் நாள் முழுவதும் அவருடன் இருப்பதால் சோபாவில் அமர்ந்து சிரிக்கிறார். இதற்கு முன் அதே இடத்தில தனியாக அமர்ந்து அவர் அழுத தருணங்களை யோசித்து பார்க்கிறேன். மேலும் நான் காரில் பயணித்தது, விமானத்தில் பயணித்தது எல்லாம் ஆடம்பரமானவை
எனது மக்களுக்காக பொறுப்பேற்க நான் கற்றுக்கொண்டேன். எனது வீட்டில் உள்ள அனைவரையும் நான் கவனிக்க வேண்டும், ஏனென்றால் அவர்களின் உடல்நிலை எனது ஆரோக்கியத்தை பாதிக்கிறது, இது எனது தந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நான் அவர்களை நேசிப்பதால் அவர்களைக் கவனிக்க விரும்புகிறேன் என நீண்ட கருது ஒன்றை பதிவிட்டுள்ளார்.