Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கப்பலில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; அக்கறை காட்டாத உலக நாடுகள்!!

கப்பலில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; அக்கறை காட்டாத உலக நாடுகள்!!
, வியாழன், 13 பிப்ரவரி 2020 (15:54 IST)
டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. 
 
ஜப்பானின் சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு புறப்பட்டது.
 
இக்கப்பல் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பிய போது, அக்கப்பலில் பயணித்த 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஜப்பான் துறைமுகத்தில் அனுமதிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து அக்கப்பலில் 135 பேருக்கு வைரஸ் தொற்று இருந்ததாக அறியப்பட்டது.
 
தற்போது அக்கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானின் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனையில் மேலும் 44 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளார். 
 
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்ட 44 பேரும் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவலை ஜப்பான் வெளியிடவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறியியல் படிப்புக்கான தகுதியில் திடீர் மாற்றம்: மாணவர்களிடையே பரபரப்பு