Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல் அறையில் நடிகை முன் சுய இன்பம் -இந்தியன் மி டூ

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (13:54 IST)
பாலிவுட்டின் பிரபல நடிகை ரேணுகா சஹானே ஹோட்டல் அறை ஒன்றில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலைப் பதிவு செய்துள்ளார்.

நடிகை ரேணுகா சஹானே  பாலிவுட்டில் பிரபல நடிகை. தற்போது பரபரப்பாக பேசப்படு வரும் இந்தியன் மி டூ வில் நடிகர் அலோக் நாத் மீது பாலியல் புகாரை வெளியிட்டு பாலிவுட் வட்டாரத்தில் விவாதங்களை உருவாக்கி உள்ளார், மேலும் பல பாலியல் சம்பவங்களை தனது டிவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனக்கு ஹோட்டல் அறை ஒன்றில் நடந்த விசித்தரமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்த டுவிட்டில் அவர் கூறியுள்ளதாவது ‘ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கிளைத்திறப்பு விழாவுக்காக நொய்டாவுக்குச் சென்றிருந்தேன். நான் எப்போது வெளியூர் சென்றாலும் ஹோட்டல்களில் தனி அறை எடுத்துத் தங்குவதுதான் வழக்கம். அப்படி அன்று என் அறையில் இருந்த போது அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் சாப்பாடு கொடுக்க எனது அறைக்கு வந்தார். வந்தவர், சாப்பாட்டை வைத்து விட்டு செல்லாமல் அங்கேயே நின்றவர். என்னைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார். அப்போது திடீரென என் கண் முன்னாலே சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கி விட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனே அவரைத் திட்டி வெளியே அனுப்பி விட்டு எனது உதவியாளரைத் துணைக்கு அழைத்து வத்துக் கொண்டேன். அதன் பின் எந்த ஹோட்டலிலும் நான் தனியாகத் தங்குவதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்