இனி பாலிவுட்டிலும் அசுரன் ராஜ்ஜியம் தான் - இனிதே துவங்கியது "அத்ரங்கி ரே" படப்பிடிப்பு!

வியாழன், 5 மார்ச் 2020 (12:15 IST)
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை,  திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் , பட்டாஸ் என இரண்டு திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக அசுரன் படத்தில் சிவசாமியாக அசுரத்தனமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.  அதையடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புது படமொன்றில் நடக்கவுள்ளார்.


இந்நிலையில் தற்போது தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்சனா படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் "அத்ரங்கி ரே"  என்ற புது படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் நடிகர் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று வாரணாசியில் பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படம் 2021 பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்றுவெளியாகும் என்பது கூடுதல் தகவல்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மலையாள சேச்சியான கீர்த்தி சுரேஷ் - கிண்டலடிக்கும் தமிழ் ரசிகர்கள்!