Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்மாவத் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்த தீபிகா படுகோனே

Advertiesment
பத்மாவத் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்த தீபிகா படுகோனே
, சனி, 3 பிப்ரவரி 2018 (10:39 IST)
பல தடைகளை கடந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவதி திரைப்படம், பத்மாவத் என்ற பெயரோடு கடந்த 24ஆம் தேதி வெளியானது. பத்மாவத் ராஜ்புத் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பத்மாவத் திரைப்படத்தை வெளியிட கூடாது என பல இடங்களில் போராட்டங்களும், கலவரங்களும் நடைப்பெற்றன.
இந்நிலையில் பத்மாவத் திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. பல இடங்களில் படத்திற்கு எதிராக கலவரம் நடந்தாலும், படத்தை பாராட்டி பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இப்படத்தின் வசூல் ரூ.160 கோடியை தாண்டி உள்ளது. இதில் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே மீது கர்னி சேனா அமைப்பினர் கடும் கோபத்தில் உள்ளனர். தீபிகாவின் மூக்கை அறுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தருவதாகவும் அறிவித்துள்ள கர்னி சேனா அமைப்பினருக்கு, தீபிகா படுகோனே தற்பொழுது தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
 
அதன்படி, என் மூக்கை அறுப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவித்திருந்தவர்கள், என் மூக்கிற்கு பதிலாக எனது பாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நான் சிறுவயதிலேயே மிகவும் தைரியமான பெண் என்று பெயர் எடுத்தவள், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவள் நான் இல்லை என்று தன்னை மிரட்டிய கர்னி சேனா அமைப்பினருக்கு தீபிகா படுகோனே பதிலடி கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெய்டு டுவிட்டர்களுக்கு சவுக்கடி கொடுத்த விக்னேஷ்சிவன்