ஐரா படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் அந்த படத்தின் இயக்குனர் கமிட்டாகியிருந்த படத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர் உள்ள படத்தையே தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் 'ஐரா' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா யமுனா, பவானி என இரண்டு வேடங்களில் முதன்முறையாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஐரா கடந்த வாரம் வெளியானது. ஆனால் படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இந்த காரணத்தினால் கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பில் விஜய்சேதுபதியை வைத்து சர்ஜூன் இயக்கவிருந்த படம் தற்போது ட்ராப் ஆகியுள்ளது. ஐரா தோல்வியால் சர்ஜூன் மீது நம்பிக்கையை இழந்த கே.ஜே.ஆர் நிறுவனம் வேறொரு இயக்குநரை தேடி வருகிறதாம்.