Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்ணீருக்குள் மூழ்கி சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பில்லா பட நடிகை!

Advertiesment
தண்ணீருக்குள் மூழ்கி சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பில்லா பட நடிகை!
, செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (09:28 IST)
தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் நடித்திருந்தார் நடிகை புருனா அப்துல்லா. பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் ஒரு சுற்றுலா பயணியாக இந்திய வந்தார் அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. அதை தொடர்ந்து "ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்", கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமான நடிகையாக பேசப்பட்டார். 


 
பின்னர் புருனாவிற்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நெருங்கி வருவதற்குள் புருனா கர்ப்பமாகிவிட்டார். இதனை புகைப்படத்துடன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இன்னும் 5 மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறி அனைவரும் வியக்கவைத்தார். 
 
அதையடுத்து கடந்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மும்பையில்  புருனா அப்துல்லா – அலன் ஃப்ரேசர் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.  இதனை தற்போது தனது இன்ஸ்டாகிராமில்  “மை பர்த் ஸ்டோரி” என்று கூறி, "மருந்து மாத்திரை இல்லாமல்  "வாட்டர் பர்" என்ற சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றெடுத்ததாக கூறியுள்ளார். குழந்தைக்கு "இசபெல்லா" என பெயரிட்டுள்ளதையும் குறிப்பிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் புருனா அப்துல்லா. அப்போது அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My Birth Story


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-மகத்: போட்டியாளர்களுக்கு அறிவுரை