ரன்வீர் சிங்கைப் பாராட்டிய அமிதாப் பச்சன்

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (13:59 IST)
‘பத்மாவத்’ படத்தைப் பார்த்துவிட்டு ரன்வீர் சிங்கைப் பாராட்டியுள்ளார் அமிதாப் பச்சன். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், கடந்த 25ஆம் தேதி நாடு முழுவதும் ரிலீஸான படம் ‘பத்மாவத்’. இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருப்பதுடன், படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.
 
பல்வேறு பிரச்னைகளுக்குப் பின் ஒருவழியாக கடந்த வாரம் ரிலீஸானது இந்தப் படம். இதில், மற்றவர்களின் நடிப்பைவிட, ரன்வீர் சிங்கின் நடிப்பு அருமையாக இருந்தது. பலரும் அவர் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், பாலிவுட்டின் பெரிய ஸ்டாரான அமிதாப் பச்சன், ரன்வீர் சிங்கின் நடிப்பைப் பாராட்டி அவருக்கு பொக்கே அனுப்பியுள்ளார். அந்த பொக்கேவை போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரன்வீர் சிங். அத்துடன், ‘இது எனக்கு மிகப்பெரிய விருது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

அமைச்சர் கே.என்.நேரு மீது இன்னும் வழக்கு பதியவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

மகள் நிச்சயதார்த்தம் ஜாலியா போனாலும் சரண்யாவுக்கு இப்படியொரு வருத்தமா? போட்டுடைத்த கணவர்

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த நடிகை திடீர் தற்கொலை.. குடும்ப பிரச்சனையா?

‘முதல்வன்’ சூட்டிங் மட்டும்தான் ரகுவரன் கரெக்ட் டைமுக்கு போனாரு.. காரணத்தை சொன்ன ரோகிணி

அடுத்த கட்டுரையில்
Show comments