பணம் கேட்டு பிரபல நடிகை அர்ச்சனா கவுதம் காரில் 4 பேர் கொண்ட கும்பலால் கைது செய்யப்பட்டார்.
மும்பை கோரோகவன் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா கவுதம்(22) அண்மையில் ஃபேஸ்புக் மூலம் அனிருத் என்பவருடன் பழகியுள்ளார். ஆனால் இருவரும் நேரில் சந்தித்தது இல்லை.
இந்நிலையில் சேலை விளம்பரத்தில் நடிக்க விருப்பமா என அனிருத் அர்ச்சனாவிடம் கேட்டுள்ளார். விளம்பரத்தில் நடிக்க முன்பணமாக 50,000 ரூபாய் தொகை தருவதாக கூறியுள்ளார்.
அர்ச்சனா இதற்கு சம்மதம் தெரிவித்தார். இது தொடர்பாக கிளையன்டை பார்க்க ஜுஹு செல்லுமாறு கூறியுள்ளார். ஜுஹு சென்ற அர்ச்சனா கிளையண்டை சந்திக்க அவர்களது காரில் ஏறியுள்ளார். கார் இருந்த 4 பேர் சிறிது நேரம் விளம்பரம் குறித்து பேசிவிட்டு பின்னர் தாங்கள் சிபிஐ என்றும், விபச்சார வழக்கில் அர்ச்சனாவை கைது செய்வதாகவும் கூறியுள்ளனர்.
அவர்கள் சிபிஐ இல்லை தெரிந்துக்கொண்ட அர்ச்சனா காரில் இருந்து தப்ப முயற்சித்துள்ளார். அவர்கள் அர்ச்சனாவை விடாமல் ரூ.1 லட்சம் கேட்டு விட்டு போன் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து அர்ச்சனா தனது சகோதரருக்கு போன் செய்து ரூ.50,000 ஆயிரம் எடுத்து வர கூறியுள்ளார்.
அர்ச்சனா தனது சந்திப்பதாக கூறி காரில் இருந்து இறங்கி தப்பியுள்ளார். அங்கு பக்கத்தில் இருந்த ஆட்டோவில் ஏறி தப்ப முயற்சித்துள்ளார். சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்கிக் கொண்ட அவரை 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் அர்ச்சனாவை ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்துள்ளான்.
இதையடுத்து அர்ச்சனா சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அந்த நபரை அடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் கைது செய்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.