ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள பாகுபலி-2 படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியதாவது, பாகுபலி பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்து தான் எடுத்தோம். ஆனால், இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை.
பாகுபலி படத்தின் கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பாகமாகத்தான் இதை கொடுக்குமுடியும் என்று தீர்மானித்து இரண்டு பாகமாக எடுத்தோம்.
இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா? என்றால், அது நிச்சயமாக வராது. இருந்தாலும், பாகுபலி கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது. அதை சீரியலாகவோ, நாவலாகவோ சொல்ல முடிவு செய்துள்ளோம்.
இந்த மாதிரி 5 வருடம் ஒரு படத்தை எடுக்கவேண்டுமானால் இந்த படத்திற்கு அமைந்ததுபோல் என்மேல் முட்டாள்தனமாக நம்பிக்கை வைத்த நடிகர்களும், கலைஞர்களும் கிடைக்கவேண்டும்.
எனது அடுத்த படத்தை கிராபிக்ஸ் இல்லாமல் ஒரு சாதாரண படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன் அதில் பிரம்மாண்டம் இருக்காது எனவும் தெரிவித்தார்.