Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்ப தகராறு: நடிகை ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்சி??

Advertiesment
குடும்ப தகராறு: நடிகை ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்சி??
, வெள்ளி, 9 டிசம்பர் 2016 (12:54 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய்யும், அபிஷேக்பச்சனும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆரத்யா என பெயரிடப்பட்ட பெண் குழந்தை உள்ளது.


 
 
சமீபத்தில் ரன்பீர்கபூருடன் ஏ தில் ஹை முஷ்கில் என்ற இந்தி படத்தில் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனங்களை கிளப்பின. 
 
ஐஸ்வர்யாராய் கவர்ச்சியாக நடித்தது அவரது குடும்பத்திலும் புயலை கிளப்பியது. மாமனார் அமிதாப்பச்சன், கணவர் அபிஷேக்பச்சன், மாமியார் ஜெயா பச்சன் மற்றும் உறவினர்கள் கோபப்பட்டதாகவும் இதனால் அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாகவும் குடும்பத்தினர் அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து ரகசியமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. 
 
மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள வந்த அமிதாப்பச்சனிடமும் நிருபர்கள் ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றது உண்மையா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.
 
ஐஸ்வர்யாராய் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பாகிஸ்தானில் உள்ள ஒரு இணையதளம் மூலம் பரப்பப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது. 
 
எனினும் உண்மை எது என்பதை அறியாமல் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவின் பாலி படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் த்ரிஷா