தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, முதல்முறையாக மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார்.
ஷ்யாமபிரசாத் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படம் அடுத்த வருடம் தொடங்குகிறது. இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அது 2017 -இல் நிறைவேறப் போகிறது.