Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுஷாந்த் சிங் மீது அலாதி பிரியம்... டைரியில் எழுதி விட்டு 15 வயது சிறுமி தற்கொலை!

Advertiesment
சுஷாந்த் சிங் மீது அலாதி பிரியம்... டைரியில் எழுதி விட்டு 15 வயது சிறுமி தற்கொலை!
, வெள்ளி, 19 ஜூன் 2020 (13:08 IST)
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் இறந்து 5 நாள் ஆகியும் மீள துயரத்தில் அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்தமான், நிக்கோபார் தீவில் போர்ட் பிளேரில் வசித்து வந்த 15 வயது சிறுமி கடந்த 17ம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து டிஜிபி தீபேந்திர பதக் கூறியதாவது, அந்த சிறுமி இறப்பதற்கு முன் சுஷாந்த் சிங் பற்றி நிறைய தனது டைரியில் எழுதி வைத்துள்ளார்.மேலும்,  சுஷாந்த்தை பாலிவுட்டின் பெரிய ஆட்கள் அனைவரும் ஒன்று  சேர்ந்து ஒதுக்கியுள்ளதை எண்ணி இந்த சிறுமி மன வேதனைப்பட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதே போல் கடந்த 15ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவர் தான் பெண் போன்று இருப்பதாக கூறி பலரும்  கிண்டல் செய்ததால் சுஷாந்த்தே தற்கொலை செய்யும்போது நானும் செய்துகொள்ளலாம் என எழுதிவிட்டு இந்த வீட்டில் முதல் பெண் குழந்தை பிறந்தால் அது நானே மறுபிறவி எடுத்து வந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”எல்லாருக்கும் காலம் வரும்” தமிழின் பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்!